வேம்பங்குடி குகன்

My photo
Pls comments or suggestions about this Blog. pilotguhan@gmail.com

Thursday, June 9, 2011

நான் கடவுள் இல்லை .......

ஆமாம் நான் கடவுள் இல்லை.
என்ன பாக்குறீங்க , என்னை குடையும் சில கேள்விகளை உங்களிடம் கேட்க போகிறேன்.
பதில் தெரிஞ்சா சொல்லுங்க .. இல்லாட்டி என் வயறு எரிய நீங்க சிரித்து விட்டு போகலாம் ....

* தூரத்தில் அழகான பொண்ணு ஒன்னு சிரிச்சு , சிரிச்சு பேசி கிட்டே வந்து என்னை பார்த்தும் , அண்ணா நீங்க அந்த project ல இருக்கீங்க அப்படின்னு ஏன் கேட்குது ? ( பக்கத்தில் நிற்கும் சில தறுதலைகள் கோரசாக மச்சான்னு சொன்ன உங்களுக்கு எப்படி இருக்கும் ?)

* எப்போது ட்ராபிக் போலீசில் மாட்டினாலும் , பர்சில் ஏன் ஒரே ஒரு 500 ருபாய் மட்டும் இருக்கு ? *customer care -கு , நான் எப்போது போன் பண்ணினாலும் ஏன் ஒரு ஆம்பளை பேசுறான் ?

* நான் உடம்பு சரி இல்லாமல் இருக்கும் பொது மட்டும் , எல்லா நண்பர்களோட பிறந்தநாள் வரிசையாய் வருது ?

* நான் புதுசை ஜட்டி வாங்கினால் கூட treat கேட்கும் நண்பர்கள் , அவர்களுக்கு பிறந்தநாளுக்கு கூட எப்படி treat கொடுக்காமல் தப்பிக்கிறார்கள் ?

* பிரபலமான வலை உலக பிரம்மாக்களின் பதிவிற்கு நான் பின்னூட்டம் இட்டால் மட்டும் , அதை யாரும் சீண்ட கூட மாட்டேன் என்கிறார்கள் ?

* நான் குளிக்க போகும் போது மட்டும் ஏன் கரண்ட் கட் ?

* எதாவது ஆன்லைன் பூகிங் நான் பண்ணும் போது மட்டும் சரியாக , லேப்டாப் பாட்டரி குறைஞ்சு பொசுக்குனு off ஆகுது ?

* என்னை காதலிக்க இல்லை , என்னை திட்டவாவது ஒரு கேர்ள் friend வேண்டும் என்று சொன்னால் , டேய் சுப்பர் டா .. நல்ல கவிதை என்று நக்கல் மட்டும் தவறாமல் வருவது ஏன் ?

* நான் demo காட்ட போன மட்டும் login page கூட சரியாக வருவது இல்லை .. ஏன் இப்படி எனக்கு மட்டும் ?

*புது சட்டை போட்டு , அலும்பல் கொடுக்கலாம் என்று நினைத்து காலையில் சாப்பிட ஹோட்டல் சென்றால் தவறாமல் என் மீது மட்டும் சாம்பார் கொட்டுவது ஏன் ?

நான் இதை பற்றி யாரிடம் பேசுவது கிடையாது .
ஏன்னா
" நீ நல்ல காமெடி பண்றடா "
" டைம் போகுறதே தெரியல போ "
" அப்புறம் இன்னைக்கு என்னடா நடந்துச்சு "
இப்படித்தான் எனக்கு பாராட்டு வருது ,
நீங்க என்ன சொல்றீங்க ? ஆனா இப்படி நடந்தே , எதையும் தாங்குற தைரியம் வந்திரிச்சு ...

"நீ ரொம்ப நல்லவன்டா" அப்படிங்குற சத்தம் எனக்கு கேட்குதுங்கோ...

No comments:

Post a Comment